Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இது ஒரு லீனியர் மல்டி ஷாட் திரைப்படம்..” தமிழ் படம் இயக்குனரின் வேற லெவல் காமெடி டிவிட்..

CINEMA

“இது ஒரு லீனியர் மல்டி ஷாட் திரைப்படம்..” தமிழ் படம் இயக்குனரின் வேற லெவல் காமெடி டிவிட்..

“தமிழ் படம்” இயக்குனர் தனது அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்டை தனது வழக்கமான நக்கல் நையாண்டியுடன் டிவீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் Spoof திரைப்படம் என்ற வகையராவை “தமிழ் படம்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் சி எஸ் அமுதன். இத்திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, எம் எஸ் பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோ பாலா ஆகியோர் நடித்திருப்பர்.

இதனை தொடர்ந்து “ரெண்டாவது படம்” என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து “தமிழ் படம்” இரண்டாம் பாகம் வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த இரண்டாவது spoof திரைப்படமாகும்.

இந்நிலையில் சி எஸ் அமுதன் தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு “ரத்தம்” என பெயர் வைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்த சி எஸ் அமுதன் “என்னுடைய லீனியர் மல்டி ஷாட் ஃபிலிம்” என நக்கலாக குறிப்பிட்டுள்ளார். “இரவின் நிழல்” திரைப்படத்தை உலகின் முதல் நான் லினீயர் சிங்கில் ஷாட்” திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அதே போல் தனது வழக்கமான நக்கல் பாணியில் “ரத்தம்” திரைப்படத்திற்கு “என்னுடைய லீனியர் மல்டி ஷாட்” திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சி எஸ் அமுதன் திரைப்படங்களில் மட்டுமல்லாது அவரின் நகைச்சுவை உணர்வை சமூக வலைத்தளங்களிலும் வெளிபடுத்தி வருபவர். அது மிகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்நிலையில் தற்போது தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டையும் இவ்வாறு நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top