Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

விஜய்யின் தந்தை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு.. என்ன விஷயம் தெரியுமா?

CINEMA

விஜய்யின் தந்தை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு.. என்ன விஷயம் தெரியுமா?

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி வெளிவந்த திரைப்படம் “சட்டப்படி குற்றம்”. இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக ரூ. 76 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் ஆனால் அந்த தொகையை இது நாள் வரை எஸ் ஏ சி திரும்பத் தரவில்லை எனவும் சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்நிறுவனம் அளித்த புகார் மனுவில் “ஒப்பந்தம் போடப்பட்ட தொகையை சந்திரசேகரிடம் இருந்து வாங்கித் தர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் எஸ் ஏ சியின் சொந்த அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாம் நீதிமன்றம்.

எஸ் ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கும் இடையே பல நாட்களாக பிரச்சனை என பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் இந்த விஷயத்தில் விஜய் எஸ் ஏ சிக்கு உதவுவாரா? இல்லையா? என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக விஜய் எஸ் ஏ சியிடம் இருந்து தூரமாகவே இருப்பதாக தகவல் வருகிறது. சமீபத்தில் கூட எஸ் ஏ சி அவரது பிறந்த நாளை தனது மனைவியுடன் கொண்டாடினார். ஆனால் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விஜய் பங்குகொள்ளவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியது. “இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது போல” என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது எஸ் ஏ சிக்கு இந்த பிரச்சனை வந்துள்ளது. இதனை விஜய் கண்டுகொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top