CINEMA
புது மாப்பிள்ளை ஆன குக் வித் கோமாளி புகழ்.. ஜோடி பொருத்தம் சூப்பர்..
குக் வித் கோமாளி புகழ் தனது காதலியான பென்ஸ் ரியாவை திருமணம் செய்துகொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற புகழ், “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அதன் பின் புகழின் புகழ் உச்சத்தை தொட்டது.
இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து புகழ் “சிக்சர்”, “சபாபதி”, “என்ன சொல்ல போகிறாய், “வலிமை”, “வீட்ல விஷேசம்”, “யானை”, “காசேதான் கடவுளடா”, “யானை” என பல திரைப்படங்களில் புகழ் நடித்துள்ளார்.
தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதனிடையே புகழ், பென்ஸ் ரியா என்ற பெண்ணை காதலித்து வருவதாக சமீப காலமாக கூறிவந்தார். மேலும் விரைவில் திருமணமும் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் புகழுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புகழ்-பென்ஸ் ரியா திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகழ்.
— Pugazh (@pugazh_iam) September 1, 2022
தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானாலும் சினிமா நடிகருக்கான புகழை புகழ் பெற்றிருந்தார். தற்போது சினிமாவிலேயே நடித்து வருவதால் அவரின் வளர்ச்சி எங்கோ சென்றுள்ளது.
தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராடி விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த புகழ் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கத் தொடங்கினார். அதன் பிறகு தான் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார். தொடர்ந்து போராடினால் வெற்றியை நிச்சயமாக அடையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புகழ் தான் என சொன்னாலும் அது மிகையாகாது.
