CINEMA
கொக்க கோலா பாடலை காப்பி அடித்தாரா அனிருத்…? உண்மை என்ன?
கொக்க கோலா விளம்பரத்தை அனிருத் காப்பி அடித்துள்ளார் என வைரலாகி வரும் வீடியோவின் உண்மை நிலை என்ன?
3 திரைப்படத்தில் இடம்பெற்ற “வொய் திஸ் கொல வெறி” பாடல் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடலாக திகழ்ந்தது. அப்பாடல் வெளிவந்த நேரத்தில் உலகத்தின் எல்லா மூலையிலும் அப்பாடலே ஒழித்து கொண்டிருந்தது. அனிருத் இசையமைத்த முதல் திரைப்படத்திலேயே உலக சாதனை படைத்ததை இந்திய திரையுலகமே “ஆ” என வாயை பிளந்து பார்த்தது.
அப்பாடல் நடிகர் தனுஷ் எழுதி அவரே பாடிய பாடல். இந்நிலையில் அப்பாடல் துர்க்கி நாட்டில் வெளிவந்த கொக்க கோலா விளம்பரத்தை காப்பி அடித்து தான் இசையமைக்கப்பட்டது என அந்த விளம்பரத்தையும் “வொய் திஸ் கொல வெறி” பாடலையும் இணைத்து பரப்பியவாறு இணையத்தில் செய்திகள் பரவின.
இந்நிலையில் இப்பாடல் நிஜமாகவே கொக்க கோலா விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா? என்பதன் உண்மை நிலையை பலர் ஆராய்ந்தனர். அதன் படி “வொய் திஸ் கொல வெறி” பாடல் வெளிவந்த சில வருடங்கள் கழித்தே துர்க்கியின் கொக்க கோலா விளம்பரம் வெளிவந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதாவது 3 திரைப்படம் வெளியான வருடம் 2011, ஆனால் துர்க்கியில் வெளிவந்த கொக்க கோலா விளம்பரம் வெளிவந்த வருடம் 2015 ஆம் ஆண்டு என தெரிய வந்துள்ளது. இத்தகவல் இணையத்தில் அனிருத்தை கேலி செய்தவர்களுக்கு பதிலடி தருவது போல் அமைந்துள்ளது.
மேலும் பொய்யான பல வதந்திகளை பரப்பி அனிருத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கிறார்கள் என்றும் , அனிருத் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாதவர்கள் உண்மை நிலை அறிய விரும்பாமல் தேவையற்ற பலி சுமத்தப்படுகிறது எனவும் இணையத்தில் அனிருத் ஆதரவாளர்கள் தங்களது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டு வருகிறார்கள்.