CINEMA
கோப்ராவாக சீறப்போகும் சீயான்.. அதிரிபுதிரி டிரைலர்..
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்தான புது அப்டேட் வெளிவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் “கோப்ரா” திரைப்படத்தை “ரெட் ஜெயன்ட் மூவீஸ்” சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் என அறிவிப்பு வந்தது. மேலும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி “கோப்ரா” திரைப்படம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்தது.
அமீர் கான் நடித்த “லால் சிங் சத்தா” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் வாங்கினார். அத்திரைப்படமும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளிவந்ததால் “கோப்ரா” வெளியீடு தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளிவருகிறது. இந்த நிலையில் தற்போது “கோப்ரா” திரைப்படத்தின் டிரைலர் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதாவது வருகிற 25 ஆம் தேதி “கோப்ரா” திரைப்படத்தில் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் “கே ஜி எஃப்” புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் என பலரும் நடித்துள்ளனர்.
சீயான் விக்ரம் எந்த கதாப்பாத்திரத்திலும் திறமையாக நடிக்ககூடியவர். எந்த கெட் அப் போட்டாலும் அவருக்கு பொருந்தும். “கோப்ரா” திரைப்படத்தில் சீயான் விக்ரம் பல கெட் அப்களில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீயான் விக்ரம் இத்திரைப்படத்தில் ஒரு ஹை டெக் திருடனாக நடித்துள்ளார் என தெரியவருகிறது. அதுவும் எண்களை வைத்து விளையாடக்கூடிய திறமைப்படைத்த ஒரு திருடன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் அறியப்படுகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.
And it’s around the corner. #CobraTrailer #Cobra @AjayGnanamuthu @SrinidhiShetty7 @IrfanPathan @roshanmathew22 @7screenstudio @dop_harish #CobraFromAugust31 pic.twitter.com/de3wiP1D3A
— Chiyaan Vikram (@chiyaan) August 21, 2022
