CINEMA
இதுவரை வந்த படங்களிலேயே இது தான் பெரிய படம்.. “கோப்ரா” ரன்னிங் டைம்
சமீபத்தில் வெளியான திரைப்படங்களை ஒப்பிடும்போது “கோப்ரா” திரைப்படம் மீக நீளமான திரைப்படமாக இருக்கப்போகிறது. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. பல மாதங்களாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக 31 ஆம் தேதி வெளியாகிறது.
“கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியா நிறுவனம் சார்பாக எஸ் எஸ் லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிடுகிறார்.
இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி, கேரளா, கர்நாடகா என பல பகுதிகளுக்கு படக்குழு சென்று வந்தனர்.
“கோப்ரா” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. சீயான் விக்ரம் எந்த கதாப்பாத்திரத்திலும் திறமையாக நடிக்ககூடியவர். எந்த கெட் அப் போட்டாலும் அவருக்கு பொருந்தும். “கோப்ரா” திரைப்படத்தில் சீயான் விக்ரம் பல கெட் அப்களில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீயான் விக்ரம் இத்திரைப்படத்தில் ஒரு ஹை டெக் திருடனாக நடித்துள்ளார் என தெரியவருகிறது. அதுவும் எண்களை வைத்து விளையாடக்கூடிய திறமைப்படைத்த ஒரு திருடன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.
இந்த நிலையில் “கோப்ரா” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “U/A” செர்ட்டிஃபிகேட் அளித்துள்ளது. மேலும் இத்திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 செகண்டுகள் நீளம் ஓடக்கூடியது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
#CobraFromAugust31 𝐂𝐞𝐧𝐬𝐨𝐫𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐔/𝐀 𝐚𝐧𝐝 𝐑𝐮𝐧 𝐭𝐢𝐦𝐞 𝐢𝐬 𝟑:𝟑:𝟑
Are you ready to meet the mathematics genius? ⭐️⚡️@chiyaan @AjayGnanamuthu @arrahman @Udhaystalin @7screenstudio @SrinidhiShetty7 @IrfanPathan @SonyMusicSouth pic.twitter.com/LxB2JZSokd
— Red Giant Movies (@RedGiantMovies_) August 27, 2022