Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஒரு வழியா ரிலீஸாக போகுது “கோப்ரா”..

CINEMA

ஒரு வழியா ரிலீஸாக போகுது “கோப்ரா”..

பல நாட்களாக தள்ளிப் போன நிலையில் தற்போது “கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்தான அப்டேட் வெளிவந்துள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படம் “அப்போ” ரிலீஸாகும் “இப்போ” ரிலீஸாகும் என இரண்டு வருடங்களாக தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ரசிகர்களும் “எப்போ ரிலீஸ்?” “எப்போ ரிலீஸ்?” என கேட்டுக் கொண்டே இருந்தார்கள். “வலிமை” திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் நிறைய முறை அப்டேட்டுக்காக ஏங்கிக் கொண்டிருந்த திரைப்படம் என்றால் கோப்ரா” என்றே கூறலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பக்டேஷனை ஏத்திக் கொண்டே சென்றார்கள்.

அதுவும் இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்ற தகவலும் ரசிகர்களை திக்கு முக்காட செய்தது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “தும்பி துள்ளல்” பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. அதன் பின் சமீபத்தில் “அதீரா” பாடல் அதிரடியாக வந்து பட்டையை கிளப்பியது.

இதனிடையே “கோப்ரா” திரைப்படத்தின் வெறித்தனமான டீசர் வெளிவந்தது. அதன் மூலம் விக்ரம் “கோப்ரா” திரைப்படத்தில் பல கெட் அப்களில் நடிக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி “கோப்ரா” திரைப்படம் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக தனியாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக “கே,ஜி,எஃப்” புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். மேலும் கே. எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ரோஷன் மேத்யூ, ஆனந்தராஜ், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                           

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top