CINEMA
கோப்ராவில் இந்த சீன் அப்பட்டமான காப்பி… இணையத்தில் விளாசும் நெட்டிசன்கள்..
“கோப்ரா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ஒரு ஆங்கில திரைப்படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கணிதத்தில் புகுந்து விளையாடும் விக்ரம் பணத்திற்காக உலக பணக்காரர்கள் பலரை கொலை செய்கிறார். அதுவும் கணிதம் மூலம் புதுவிதமாக கொலை செய்கிறார். இந்த கொலைகளை யார் செய்கிறார் என கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான் பதான் வருகிறார். ஒரு புறம் ஒரு ஹேக்கர் விக்ரமை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். விக்ரம் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? அந்த ஹேக்கர் யார்? என்பது தான் “கோப்ரா” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
சீயான் விக்ரம் வெறித்தனமாக நடித்திருக்கிறார். குறிப்பாக கணிதம் மூலம் கொல்லும் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். பல கெட் அப்களில் வரும் விக்ரம் அந்தந்த கெட் அப்பிற்கு ஏற்றவாறு நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.
“கோப்ரா” திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, கே எஸ் ரவிக்குமார், இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ ஆகிய பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு விசாரணை காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்ததாக பலரும் கூறிவந்தனர்.
தற்போது அந்த காட்சி Inside என்ற ஒரு ஆங்கில குறும்படத்தில் இருந்து திருடப்பட்ட காட்சி என்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “இந்த காட்சியை அஜய் ஞானமுத்து அப்படியே திருடியிருக்கிறார்” என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அந்த காட்சி இதோ..
யாரோ உங்க @AjayGnanamuthu சீன திருடிட்டாங்க பத்து வருஷம் முன்னாடி.#Cobra pic.twitter.com/cR9VbYi6N5
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) August 31, 2022