CINEMA
சோழப் புலி இன்று வருகிறான்…
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் “சோழப் புலி” இன்று வருகிறான்..
சீயான் விக்ரமிற்கு சமீபத்தில் Chest discomfort என்று கூறப்படும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் நலம் தேறி அடுத்த நாளே வீட்டிற்கு திரும்பினார்.
உடல் நலம் சரியில்லாத அன்று நடைபெற்ற “பொன்னியின் செல்வன்” டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. ஆதலால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரம் குறித்த புதிய அப்டேட் வெளிவர உள்ளது.
ஆம்! அதாவது இன்று மாலை 5 மணிக்கு “Our Chola Tiger” வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிங்கில் பாடலா அல்லது ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரம் குறித்த புரோமோவா என தெரியவில்லை. இது குறித்து லைகா நிறுவனம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “விழாவில் இளவரசனை பார்க்கவில்லையா? நாங்கள் ஸ்பெஷலாக ஒன்று வைத்திருக்கிறோம்” என பகிர்ந்துள்ளது.
Missed the Crown Prince at the event?
We have something special for you!Tomorrow at 5 PM #PS1Teaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/DyADtOG434
— Lyca Productions (@LycaProductions) July 12, 2022
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவருகிறது.
அதே போல் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
