CINEMA
கோப்ரா திரைப்படத்தின் கதை இது தானா?..
சீயான் விக்ரம் நடிக்கும் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கதை இது தான் என ஒரு செய்தி பரவுகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படம் “அப்போ” ரிலீஸாகும் “இப்போ” ரிலீஸாகும் என இரண்டு வருடங்களாக தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
ரசிகர்களும் “எப்போ ரிலீஸ்?” “எப்போ ரிலீஸ்?” என கேட்டுக் கொண்டே இருந்தார்கள். “வலிமை” திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் நிறைய முறை அப்டேட்டுக்காக ஏங்கிக் கொண்டிருந்த திரைப்படம் என்றால் கோப்ரா” என்றே கூறலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பக்டேஷனை ஏத்திக் கொண்டே சென்றார்கள்.
அதுவும் இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்ற தகவலும் ரசிகர்களை திக்கு முக்காட செய்தது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “தும்பி துள்ளல்” பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. அதன் பின் சமீபத்தில் “அதீரா” பாடல் அதிரடியாக வந்து பட்டையை கிளப்பியது.
இதனிடையே “கோப்ரா” திரைப்படத்தின் வெறித்தனமான டீசர் வெளிவந்தது. அதன் மூலம் விக்ரம் “கோப்ரா” திரைப்படத்தில் பல கெட் அப்களில் நடிக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
அதன் பின் ‘கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது “கோப்ரா” திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
#Cobra #CobraFromAugust11 #ChiyaanVikram 😬😬❤️❤️🐍🐍 @arrahman @7screenstudio @SrinidhiShetty7 @IrfanPathan @roshanmathew22 pic.twitter.com/49L5fw5PTH
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) June 23, 2022
அதில் நடுவில் விக்ரம் இருக்க அவரை சுற்றி பல நம்பர்கள் பறக்கின்றன. இதனை கொண்டு எண்களை வைத்து விளையாடி போலீஸை அலறவிட்டு பல கொள்ளைகளில் விக்ரம் ஈடுபடுவதே கதை என தெரிய வருகிறது. டிரைலரில் ஏற்கனவே கதை ஓரளவு தெரிந்து விட்டது. இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த போஸ்டரில் இந்த எண்கள் விளையாட்டே கதை என வியூகிக்கப்படுகிறது.