CINEMA
பிரபல நடிகையின் குழந்தைக்கு “கோப்ரா” என பெயர் வைத்த விக்ரம்..
நடிகர் விக்ரம் பிரபல நடிகையின் மகனை “கோப்ரா” குழந்தை என கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. பல மாதங்களாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக 31 ஆம் தேதி வெளியாகிறது.
“கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட திருச்சிக்கு படக்குழுவினர் சென்று ரசிகர்களை சந்தித்தனர்.
இந்த நிலையில் நேற்று “கோப்ரா” படக்குழுவினர் கேரளாவிற்கு புரோமோஷனுக்காக சென்றனர். அங்கே மேடையில் பேசிய நடிகை மியா ஜார்ஜ் “இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கிய போது நான் Single ஆக இருந்தேன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது எனக்கு திருமணம் ஆகியிருந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது நான் 5 மாதம் கர்ப்பமாக இருந்தேன்” என கூறினார்.
உடனே விக்ரம் “இப்போது படம் ரிலீஸாகும்போது குழந்தையுடனேயே வந்துவிட்டீர்கள்” என கூறினார். அதன் பின் மியா ஜார்ஜின் குழந்தையை தூக்கிக்கொண்டு மேடையில் ஏறிய விக்ரம் “இது கோப்ரா குழந்தை” என கூறினார். இவ்வாறு கலகலப்பாக நடந்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“கோப்ரா” திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.