CINEMA
“நான் கர்ப்பமாக இருந்ததை மறைத்தேனா?”.. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சின்மயி
பின்னணி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ரசிகர்கள் சின்மயிடம் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ஏன் பதிவிட வில்லை? என கேட்டதற்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.
பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு ஆண் மற்றும் பெண் என அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் சின்மயி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் அவரிடம் “நீங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா?” எனவும் “நீங்கள் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் எதையும் வெளியிடவில்லையே” எனவும் கேள்விகள் கேட்டுள்ளனர்.அதற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் எதையும் வெளியிடவில்லை என்பதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? என பலரும் கேட்கின்றனர். எனது நெருங்கிய சொந்தம் மற்றும் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே நான் கர்ப்பமாக இருப்பது தெரியும். ஏனென்றால் என்னை பாதுகாத்து கொள்வதற்காகவே” என கூறியுள்ளார்.
சின்மயி மேலும் அந்த பதிவில் “எனது குழந்தையின் புகைப்படத்தை நான் இப்போதைக்குள் வெளியிட மாட்டேன். பல நாட்கள் கழித்து தான் வெளியிடுவேன்” எனவும் கூறியுள்ளார்.
சின்மயி தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பின்னணி பாடகி சின்மயி தமிழ் மற்றும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்பட பாடல்களில் பின்னணி பாடியுள்ளார்.
குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “96” திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் பாடி நம்மை ரசிக்க வைத்தார்.
View this post on Instagram