CINEMA
பாடகி சின்மயிக்கு பிறந்த Twins… குஷியில் தம்பதியினர்
பின்னணி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
பின்னணி பாடகி சின்மயி தமிழ் மற்றும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்பட பாடல்களில் பின்னணி பாடியுள்ளார்.
குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “96” திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் பாடி நம்மை ரசிக்க வைத்தார். “96” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நமது உணர்வுகளை தூண்ட வைப்பவை என்பதில் நமக்கு சந்தேகமே இருக்காது.
இதனிடையே பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு ஆண் மற்றும் பெண் என அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் சின்மயி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் சின்மயிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Driptah and Sharvas
The new and forever center of our Universe. ❤️
@rahulr_23 pic.twitter.com/XIJIAiAdqx— Chinmayi Sripaada (@Chinmayi) June 21, 2022
“கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் “ஒரு தெயவம் தந்த பூவே” என்ற பாடலின் மூலம் தான் பின்னணி பாடகியாக சின்மயி அறிமுகமானார். அதன் பின் தமிழில் பட ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
“செல்லமே” திரைப்படத்தில் “காதலிக்கும் ஆசை இல்லை”, “”பீமா” திரைப்படத்தில் “எனதுயிரே” பாடல், “சக்கரக்கட்டி” திரைப்படத்தில் “சின்னம்மா” பாடல், “அயன்” திரைப்படத்தில் “ஓயாயியே”, “விண்ணைத் தாண்டி வருவாயா” திரைப்படத்தில் “அன்பில் அவன்” ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் “வாகை சூடவா” திரைப்படத்தில் “சர சர சாரக்காத்து”, “கோ” திரைப்படத்தில் “அமலி துமலி”, “எங்கேயும் காதல்” திரைப்படத்தில் “நெஞ்சில் நெஞ்சில்”, “24” திரைப்படத்தில் “நான் உன் அருகினிலே”, “தர்ம துரை” திரைப்படத்தில் “எந்த பக்கம்” ஆகிய பல ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார்.
சின்மயி பல நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் இருந்திருக்கிறார். மேலும் “ME TOO” விஷயத்தில் கலைத் துறையின் முக்கிய நபர்களின் மீது பல குற்றச்சாட்டுகளையும் வைத்து சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.