CINEMA
கேப்டன் மில்லர் இரண்டாம் பாகமும் வரும்.. சுவாரசிய தகவல்
தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தனுஷ் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று நேற்று வெளிவந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது “கேப்டன் மில்லர்” திரைப்படம் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனராம். இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய “ராக்கி” மற்றும் “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்கள் குறுகிய நாட்களிலேயே படப்பிடிப்பு முடிக்கப்பட்டதாம். ஆனால் “கேப்டன் மில்லர்” மிக நீண்ட நாட்கள் எடுக்குமாம்.
அதே போல் “கேப்டன் மில்லர்” திரைப்படம் பாகம் ஒன்றோடு நிறைவடையாதாம். பாகம் இரண்டு நிச்சயம் வரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கிட்டதட்ட 3 வருடங்களாக இத்திரைப்படத்தின் கதையை எழுதினாராம். அதன் பின் தான் தனுஷிடம் சென்று கதையை காட்டி ஓகே வாங்கினாராம். இவ்வாறு பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. “கேப்டன் மில்லர்” திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே வன்முறை காட்சிகள் அதிகம் தென்படும். ஆனால் இத்திரைப்படம் தனுஷிற்கு ஏற்றார்போல் அவ்வாறு இல்லாமல் ஒரு கம்மெர்சியல் ஆக்சன் பிளாக் திரைப்படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கை வசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த “மாறன்”, “கலாட்டா கல்யாணம்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “திருச்சிற்றம்பலம்”, “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாக தயாராக உள்ளன.
