CINEMA
பா ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. கடுப்பில் பௌத்த சங்கம்
பா ரஞ்சித் இயக்கிய “தம்மம்” திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று பௌத்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக பௌத்த சங்கம் தெரிவித்துள்ளதாம்.
வெங்கட் பிரபு, ராஜேஷ், பா ரஞ்சித், சிம்பு தேவன் ஆகியோரின் இயக்கத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளிவந்த Anthology திரைப்படம் “விக்டிம்”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நான்கு திரைப்படங்களில் ஒன்று “தம்மம்” இதனை பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.
இதில் ஒரு காட்சியில் ஒரு சிறுமி புத்தரின் சிலை மேல் ஏறி நின்றுக்கொண்டிருப்பாள். அவளுடைய அப்பா “சாமி சிலை மேல் ஏறி நிற்காதே” என கூறுவார். அதற்கு அந்த சிறுமி “புத்தரே சாமி இல்லை ன்னு சொல்லிருக்காரு. நீங்க புத்தரையே சாமி ஆக்குறீங்க” என்பது போல் கூறுவாள்.
இந்த காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது தமிழக பௌத்த சங்கம் இந்த காட்சி பௌத்த மதத்தினரின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது எனவும் இந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் போர் கொடி தூக்கியுள்ளதாம்.
மேலும் “பௌத்தம் வலுவாக இருக்கும் நாடுகளில் இது போன்ற காட்சி வந்திருந்தால் இந்நேரம் அந்த இயக்குனர் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால் இங்கே சிறுபான்மையினரான பௌத்தர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு இல்லாததால் புத்தரை அவமதிக்கிறார்கள்” என கூறியுள்ளதாம். அதே போல் சம்பந்தப்பட்ட அந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் பா ரஞ்சித் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறியுள்ளனராம்.
பா ரஞ்சித் புத்தரை குறித்து பல முறை பேசியுள்ளார். அவரது திரைப்படங்களில் கூட குறியீடாகவும் சில காட்சிகளில் புத்தரை வைத்திருக்கிறார். எனினும் தற்போது “தம்மம்” திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.