CINEMA
செய்தியாளர்களுக்கு பிரியாணி; கமல் மனசே மனசு தான்..
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு கறிச் சோறு, பிரியாணி என அசத்தியுள்ளார் கமல் ஹாசன்
பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் ஆகியுள்ளது என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
இதனை தொடர்ந்து கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விருந்தில் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டன் பிரியாணி, கறிச் சோறு, நாட்டுக்கோழி குழம்பு போன்றவை பறிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியால் கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது போல் தெரிகிறது. அடுத்தடுத்து என்னென்ன சர்ப்ரைஸ் கொடுக்க போறாரோ? என தெரியவில்லை.
“விக்ரம்” திரைப்படம் உலகம் முழுவதும் செமத்தியான கலெக்சனை அள்ளியுள்ளது. அதாவது வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 300 கோடியை நெருங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே கடந்த ஒரு வாரத்தில் ரூ. 105 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட ஒரு தியேட்டர் உரிமையாளர் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் “பாகுபலி 2” திரைப்படத்தை ஓரங்கட்டி உள்ளது என பதிவிட்டு இருந்தார். அதாவது ஒரு வாரத்திலேயே “பாகுபலி 2” திரைப்படத்தின் ரெகார்டை தகர்த்து கொண்டு “விக்ரம்” திரைப்படம் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தை போலவே “விக்ரம்” திரைப்படமும் ஒரு வாரம் ஆகியும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கமே நிறைந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.