Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சேரின்னாலே அப்படித்தான்”.. பிரிகிடாவின் சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

CINEMA

“சேரின்னாலே அப்படித்தான்”.. பிரிகிடாவின் சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

நடிகை பிரிகிடா சாகா சேரியை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதற்கு மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்.

“ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரீஸின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் பிரிகிடா சாகா. இவர் இந்த வெப் சீரீஸில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆதலால் இவர் பரவலாக பவி டீச்சர் என்றே அறியப்பட்டார். வெப் சீரீஸில் இவர் க்யூட் கேர்ளாக வலம் வந்து பல ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

இந்நிலையில் பிரிகிடா சாகா, பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தில் சிலக்கம்மா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க சென்ற பிரிகிடா சாகா பத்திரிக்கையாளருக்கு பேட்டி தந்தார். அப்போது நிருபர் “திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக இருக்கிறதே?” என கேட்க, அதற்கு பிரிகிடா சாகா “சேரிக்கு சென்றால் அந்த மாதிரி வார்த்தைகளைத் தான் கேட்க முடியும். அதனை மாற்றி நாம் சினிமாவிற்காக ஏமாற்ற முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே போனால் எப்படி பேசுவார்கள் என்று” என கூறினார்.

பிரிகிடா சாகாவின் சேரி குறித்தான இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிரிகிடா சாகா தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் என் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், இரவின் நிழல் திரைப்படத்தில் கதை நடக்கும் இடங்கள் மாறும்போது பாஷையும் மாறும் என்று தான் கூற வந்தேன். தவறாக உணர்த்திவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியுள்ளார். மேலும் பார்த்திபனும் பிரிகிடா சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top