CINEMA
பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு நடிகரா? பட்டையை கிளப்பும் பட்டாசான டிரைலர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த கன்னட திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தனது இளவயதிலேயே தமிழக பாஜகவின் தலைவரான அண்ணாமலை, கர்நாடகா சிங்கம் என அழைக்கப்படுபவர். இவர் 2011-ல் கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக பணி புரிந்தவர்.
கர்நாடகாவின் சிக்கமகலூரு மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பர் இண்டன்டாக பணிபுரிந்தார். மேலும் பெங்கலூரு தெற்கு பகுதியில் டெப்யூட்டி போலீஸ் கமிஷனராகவும் பணிபுரிந்தார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தினமும் இவர் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் அந்த நாள் கடக்கவே கடக்காது.
இந்நிலையில் இவர் ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் பரவின. எனினும் அது நம்பத்தகுந்த தகவல் இல்லை என சிலர் கூறிவந்தனர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு படம் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் பெயர் “அரப்பி”. இத்திரைப்படத்தில் இரண்டு கைகள் இல்லாத ஆனால் நீச்சல் போட்டியில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞருக்கு பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கிறார். டிரைலரில் “சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ், முதன் முதலாக திரையில்” என குறிப்பிட்டு உள்ளனர்.
“அரப்பி” திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த விஸ்வாஸ் கே எஸ், உண்மையிலேயே ஒரு Para-Swimmer ஆவார். மேலும் அவர் இரண்டு கைகள் இல்லாமலேயே பல துறைகளில் சாதித்து உள்ளார். இவர் தற்காப்பு கலையில் சிறந்தவரும் ஆவார். மேலும் ஸ்விம்மிங் போட்டியில் பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமையையும் சேர்த்துள்ளார். தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
டிரைலரில் ஸ்டைலாக கெத்தாக புல்லட்டில் கலக்கலாக தென்படுகிறார் அண்ணாமலை. இரண்டு கைகள் இல்லாதவருக்கு உத்வேகம் கொடுக்கும் பயிற்சியாளராக மிளிர்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தியை கேட்டு பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். பலரும் “அரப்பி” திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் அண்ணாமலைக்கும் படக்குழுவிற்கும் பலர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
