Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஜெய் பீம்” திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? அடேங்கப்பா!!

CINEMA

“ஜெய் பீம்” திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? அடேங்கப்பா!!

சரமாரியாக “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தற்போது என்ன விருது அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

“ஜெய் பீம்” திரைப்படம் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பெருவாரியான கவனத்தை பெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருது “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது. மேலும் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து போஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டது.

மேலும் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் சூர்யாவுக்கு சிறந்த நடிகர் என்ற விருதும் லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் கிடைத்தது.

அதே போல் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் “பெரிய நாயகி”, “பராசக்தி” ஆகிய தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சீன நாட்டில் நடைபெறும் 12 ஆவது  பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவின் டியான்டன் விருது  “ஜெய் பீம்” திரைப்படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்து வருவது தமிழ் சினிமாத்துறையை உலகம் முழுவதையும் வியப்பாக பார்க்க வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top