CINEMA
“பீஸ்ட்” திரைப்படத்தை வைத்து செய்யும் வட இந்தியர்கள்; “விட்ருங்கடா” என கதரும் ரசிகர்கள்…
விஜய் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படத்தை வட இந்தியர்கள் பங்கமாய் விமர்சித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. விஜய் ரசிகர்களே தியேட்டரில் புலம்பும் கதைகளை நாம் பார்த்திருப்போம்.
மேலும் இத்திரைப்படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியானது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தான் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
அதுவும் விமர்சிப்பது தமிழ் ரசிகர்கள் அல்ல. வட இந்திய ஆட்கள். உதாரணத்திற்கு ஒரு வட இந்திய ரசிகர் விஜய் ஜெட் ஓட்டும் காட்சியை குறிப்பிட்டு “என்ன இது? எனது மூளை ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டது, லாஜிக்கே சுத்தமாக இல்லை” என குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார்.
அதே போல், மற்றொருவர் “ஹெல்மெட் இல்லாமல் ஜெட்டில் பறக்கும் வீரரை நான் இது வரை பார்த்ததே இல்லை” என விமர்சித்துள்ளார். இன்னொருவர் “இந்த காட்சியை பார்த்து எனது மூளை செல்கள் சில காணாமல் போனது” என விமர்சித்துள்ளார்.
வட இந்தியர்கள் மட்டுமல்லாது , உலகம் முழுவதிலும் இருந்து குறிப்பிட்ட அக்காட்சியை பகிர்ந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் வேதனையில் உள்ளனர். ஆதலால் விஜய் ரசிகர்கள் இணையத்தில் இயக்குனர் நெல்சனை வசை பாடி வருகின்றனர்.
ஆனாலும் ஒரு விஜய் ரசிகர் ஆறுதலாக “நார்த் இந்தியா ஆளுங்க பீஸ்ட் படத்த கிண்டல் பண்றாங்கன்னு பீல் பண்ண வேண்டாம். கண்டிப்பா இந்த படம் நிறையா பேருக்கு ரீச் ஆகும். கண்டிப்பா எதாவது ஒரு சீன்ல கண்டிப்பா தளபதிய பிடிக்கும் டான்ஸ்/ப்ரெசன்ஸ்” என பதிவிட்டுள்ளார். இவ்வாறு “பீஸ்ட்” திரைப்படத்தின் விமர்சனங்கள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.