CINEMA
ஓடிடியில் வெளியாகிறது “பீஸ்ட்”… பாவம் ரசிகர்கள்?
விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் இணையத்தள ஓடிடி பிளாட்ஃபார்மில் கூடிய விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்றவுடன் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்தோடும் ஆரவரத்தோடும் பட வெளியீடுக்காக காத்திருந்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு “பீஸ்ட்” பெரும் ஏமாற்றத்தை தந்தது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களின் முகங்கள் வாடிப்போனதை பார்த்திருப்போம். “நெல்சன் சொதப்பிட்டார்” “விஜய் ஏன் இப்படி ஒரே மாதிரியே” போன்ற விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து திரைப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக சில தகவல்கள் வந்தன. ஆனால் பெரும்பான்மையான விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை தான் கொடுத்ததாக அறியப்படுகிறது. மேலும் “பீஸ்ட்”க்கு போட்டியாக களம் இறங்கிய “கே. ஜி. எஃப். சேப்டர் 2” பல்வேறு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திரையரங்குகள் திருவிழா போல் காணப்பட்டன.
குறிப்பாக இந்திய அளவில் அசூர வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்டு வருகிறது கே. ஜி. எஃப் 2. கிட்டத்ததட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வெளியானது. அதிக ஹவுஸ் ஃபுல் ஷோக்களால் பல திரையரங்குகள் நிரம்பின. தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலும் சக்கை போடு போட்டு கொண்டிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
Can you feel the POWER💥TERROR💥FIRE💥BECAUSE BEAST ARRIVES ON NETFLIX ON MAY 11 💪 in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. pic.twitter.com/7M5uuvlnsA
— Netflix India (@NetflixIndia) May 4, 2022
இந்நிலையில் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி 30 நாட்களுக்குள்ளாகவே ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளிவர தயாராக உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 11 ஆம் தேதி “நெட்ஃபிளிக்ஸ்” தளத்தில் பீஸ்ட் வெளியாகிறது. படம் வெளியாகி 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளிவருவதாக வெளிவந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.
