CINEMA
பிரபு தேவாவுக்கு அம்மா ஆகும் பாக்கியலட்சுமி.. இனி சினிமாலயும் பார்க்கலாம்..
பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா தற்போது பிரபு தேவாவுக்கு அம்மாவாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் தான் தற்போது தமிழ்நாட்டையே கலக்கி கொண்டிருக்கிறது. டி ஆர் பி ரேட்டிங் படு பயங்கரமாக எகிறிக்கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. ராதிகா-கோபியின் உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டதால் சீரியல் சூடு பிடித்துள்ளது.
கோபியிடம் எரிமலையாய் பொங்கி எழுந்த பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் கோபியிடம் அவரது மகள் இனியா மிகுந்த கோபத்துடன் “இனிமேல் உங்கள் முகத்தில் முழிக்கவே மாட்டேன்” என கூறினார். மேலும் தனது அம்மா பாக்கியாவிற்காக ஏங்கினார்.
மறுபக்கம் வெளியூரில் செட்டில் ஆக கிளம்பிய ராதிகாவின் மனதை அவரது அம்மா கலைத்துவிட்டார். இனி ராதிகா என்ன முடிவெடுக்கப்போகிறார்? கோபி பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துவாரா? அப்படியே கோபி சமாதானப்படுத்தினாலும் பாக்கியா கோபியை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கோபி ராதிகாவை திருமணம் செய்துக்கொள்வாரா? இனி என்ன நடக்கும் என நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமியாக நடித்த சுசித்ரா சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். ஆம்!
அதாவது பிரபு தேவா நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடரின் மூலம் ஒவ்வொரு குடும்ப பெண்மணிகளின் இதயத்துக்குள் குடி புகுந்த சுசித்ரா தற்போது பெரிய திரையில் ஜொலிக்க உள்ள செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram