Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அவதார் 2” திரைப்படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்???

CINEMA

“அவதார் 2” திரைப்படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்???

“அவதார் 2” திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினே ரிலீஸ் செய்யப் போவதாக ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சமீபத்தில் பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டு வந்தார். “ராதே ஷ்யாம்”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “டான்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் அதில் முக்கியமானவை. அதிலும் “விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் ரூ. 300 கோடியை தாண்டி கலெக்சன் அள்ளியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் தொகுதியின் ஆளுங்கட்சி எம். எல். ஏ.வாக திகழ்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் உதயநிதி ஸ்டாலின் பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருவதால் இணையத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர்களை மிரட்டுகிறார் என பலர் வதந்தியை கிளப்பி வந்தனர்.

இது குறித்து பல பேட்டிகளில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் அதனை மறுத்து வந்தார். “விக்ரம்” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிட உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்த போது கமல் ஹாசனை மிரட்டி தான் வாங்கினார் என வதந்தியை பரப்பினார்கள்.

ஆனால் “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது சாதுர்யமான பேச்சால் அந்த வதந்திக்கு முற்றிப் புள்ளி வைத்தார். அதாவது “கமல் ஹாசனை யாராலும் மிரட்ட முடியாது, யார் மிரட்டினாலும் கமல் ஹாசன் பயப்படமாட்டார்” என கூறினார்.

இந்நிலையில் இணையத்தில் ஒரு கலகலப்பான மீம் ஒன்று பரவி வருகிறது. அதாவது “அவதார் 2” திரைப்படத்தை உதயநிதி வெளியிடுவது போல் ஒரு போஸ்டர் பரவி வருகிறது. இதனை “டைம் பாஸ்” என்ற இதழ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் “நடந்தாலும் நடக்கும்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீம்-ஐ நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top