CINEMA
கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் அட்லி.. இவரே ஹீரோவா நடிக்கப் போறாரோ??
கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் அட்லியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழின் வெற்றி இயக்குனரான அட்லி, தற்போது ஷாருக் கானை வைத்து பாலிவுட்டில் “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறார். அதே போல் யோகி பாபுவும் நடிக்கிறார். இதற்கு முன் யோகி பாபு “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அட்லி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் மாஸாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் இதோ..
Just like tat pic.twitter.com/LNsQDQTgby
— atlee (@Atlee_dir) July 10, 2022
அட்லி இந்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் “Just like tat” என குறிப்பிட்டுள்ளார். “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த மாதம் வெளியானது. அதில் ஷாருக் கான் பல துப்பாக்கிகளுடன் தென்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனை கொண்டு இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக அமைய உள்ளதாக தெரிய வந்தது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை அட்லி ஒரு முன்னணி இயக்குனர். இவர் தொட்டதெல்லாம் ஹிட் தான். இவர் இயக்கிய முதல் திரைப்படமான “ராஜா ராணி” மக்களை வெகுவாக கவர்ந்தது. அத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என வரிசையாக வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.
இவ்வாறு அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான் என்ற நிலையில் தற்போது ஷாருக் கானை வைத்து படம் இயக்குகிறார். இத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
