CINEMA
அட்லி-ஷாருக் கான் காம்போ… சும்மா தூள் பறக்குது..
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்துள்ளது.
அட்லி தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தனது இயக்குனர் கேரியரை தொடங்கினார்.
முதல் படமே மாஸ் ஹிட். காதலும் சென்டிமென்ட்டும் கலந்து உருவான “ராஜா ராணி” பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு அட்லிக்கு ஏறுமுகம் தான். தளபதி விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்தது.
“தெறி” வெறித்தனமாக ஹிட் ஆனது. அத்திரைப்படத்தின் மூலம் அட்லி மாஸ் ஹீரோக்களின் டைரக்டர் என்ற முத்திரையை பதித்தார். அதன் பின் விஜய்யை வைத்து மீண்டும் இயக்க “மெர்சல்” மூலம் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இத்திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி வைத்தார். அந்த திரைப்படமும் தாறு மாறு ஹிட் ஆக, அதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“பிகில்” திரைப்படத்தில் மீண்டும் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி. பாடல்கள் அனைத்தும் தாறு மாறு ஹிட். படம் விஜய்க்கு ஏற்ற பக்கா மாஸ் கமெர்சியல் திரைப்படமாக அமைந்தது. இவ்வாறு கோலிவுட்டில் தொட்டதெல்லாம் வெற்றி என்று அட்லிக்கு அமைந்த நிலையில் அட்லி பாலிவுட் போவதாக பேச்சு எழுந்தது.
சில மாதங்களிலேயே ஷாருக் கானிடம் கதை சொல்லியுள்ளார் என்றும் ஷாருக் கானும் ஒப்புக்கொண்டார் எனவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் பாலிவுட் திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்துள்ளது.
இதில் ஷாருக் கான் முகத்தில் படுகாயங்களுடன் தென்படுகிறார். பல துப்பாக்கிகளில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டும், ஒரு கத்தியை எடுத்துக் கொண்டும் போருக்கு போவது போல் ரெடி ஆகிறார். அதன் பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஷாருக் கான் அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஒரு டிரைன் செல்கிறது. இவ்வாறு அந்த வீடியோ நிறைவடைகிறது.
இத்திரைப்படத்திற்கு “ஜவான்” என பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.