CINEMA
ஹாலிவுட்டிற்கே சவால் விடும் ஆர்யா!! வேற லெவல் டிரைலர்
ஹாலிவுட்டிற்கே சவால் விடும் வகையில் ஆர்யா நடித்த புதிய திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் ஏலியன், பிரிடேட்டர் போன்ற கதையம்சங்களில் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது தமிழில் இது போன்ற ஒரு கதையம்சத்துடன் ஒரு திரைப்படம் வெளிவர உள்ளது. அத்திரைப்படம் தான் “கேப்டன்”.
ஆர்யா நடித்துள்ள இத்திரைப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஜோம்பி கான்செப்ட்டை வைத்து “மிருதன்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் Space கான்செப்ட்டை வைத்து “டிக் டிக் டிக்” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அதே போல் “டெடி” என்ற வித்தியாசமான திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இவ்வாறு ஹாலிவுட் பாணியான கதையம்சத்தில் கலக்கும் சக்தி சௌந்தர் ராஜனின் புதிய திரைப்படம் தான் “கேப்டன்”. பிரிடேட்டர் போன்ற கற்பனையான ஒரு பயங்கரமான ஆட்கொல்லி உயிரினத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சமாக வெளிவர உள்ளது இத்திரைப்படம்.
இந்த நிலையில் தற்போது “கேப்டன்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் கேப்டனாக இருக்கும் ஆர்யா, காட்டுக்குள் இருக்கும் பயங்கரமான பிரிடேட்டரை எப்படி கொல்கிறார் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. டிரைலர் பயங்கரமாக இருக்கிறது. நிச்சயமாக இத்திரைப்படம் வெற்றிபெறும் என அறியப்படுகிறது.
இத்திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். எஸ் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
