CINEMA
ஏ. ஆர். ரகுமான் இயக்கிய “Virtual Reality” திரைப்படம்; ஹாலிவுட்டையே திகைத்து பார்க்க வைத்த சம்பவம்.
ஆஸ்கார் நாயகன் என போற்றப்படும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் “Virtual Reality” என்ற புதிய தொழில்நுட்பத்தை வைத்து ஒரு முழு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அத்திரைப்படத்தை குறித்த சுவாரஸியமான அப்டேட்களை பார்க்கலாம்.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமன்றி உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரும் கூட. ஆஸ்கார் விழாவில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தமிழில் அவர் கூறியது தமிழர்களை புல்லரிக்க வைத்தது. மேலும் ஏ. ஆர். ரகுமானை உலகமே அதிசயிக்கத்தக்க வகையில் திரும்பி பார்த்தது. இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை தான்.
ஆனால் ஏ. ஆர். ரகுமான் ஒரு “Virtual Reality” திரைப்படத்தை இயக்கியுள்ளது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். ஆம்! கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மனைவி சயிராவுடன் இணைந்து இத்திரைப்படத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை தீட்டினார்.
அதன் பின் புகழ்பெற்ற ரோம் நகரில் 13 நாட்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இத்திரைப்படத்தின் பெயர் “லீ மஸ்க்”. இத்திரைப்படத்தின் முக்கிய மற்றும் ஆச்சரியப்படுத்தும் அம்சம் என்னவென்றால்?
இத்திரைப்படத்தில் இசையும் வாசனையும் ஒன்று சேர கலந்துள்ளதாம். அதாவது இத்திரைப்படத்தில் சில நறுமணங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நறுமணத்தை பார்வையாளர்களையும் உணரவைப்பதற்காக “Virtual Reality”-ல் பல மாயங்களை செய்துள்ளாராம். அதாவது அத்திரைப்படத்தின் கதாப்பாத்திரம் ஒரு நறுமணத்தை நுகரும்போது பார்வையாளர்களும் அந்த நறுமணத்தை உணரமுடியுமாம்.
இவ்வாறு ஆச்சரியப்படுத்தும் பல அம்சங்களை உடைய “லீ மஸ்க்” திரைப்படம் தற்போது பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் கமெர்சியல் வெளியீடு குறித்தான எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.
“லீ மஸ்க்” திரைப்படம் முழுக்க ஒரு ஆங்கில திரைப்படம் தான். இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் என அனைத்துமே ஆங்கிலேயர்கள் தான்.
ஏ. ஆர். ரகுமான் இதற்கு முன் “99 songs” என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி அதை தயாரிக்கவும் செய்திருந்தார். இந்நிலையில் “லீ மஸ்க்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.