CINEMA
ஆண்ட்ரியா ட்ரெஸ் போடாமல் நடித்த காட்சி நீக்கம்… பாவத்த!!
ஆண்ட்ரியா ஒட்டுத் துணி கூட இல்லாமல் நடித்த காட்சி இயக்குனரால் நீக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியா முதலில் பின்னணி பாடகியாகத் தான் சினிமாத்துறையில் நுழைந்தார். மேலும் பல நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் திகழ்ந்தார். அதன் பின் “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா”, என பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கண்கவர் மார்டன் அழகியாக திகழும் ஆண்ட்ரியாவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் “வட சென்னை”, “அரண்மனை 3”, “மாஸ்டர்”, “வட்டம்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய வெற்றித் திரைப்படமான “பிசாசு” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட “பிசாசு 2” திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த காட்சி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“பிசாசு 2” திரைப்படம் குழந்தைகள் பார்க்க ஏதுவாக இருக்க வேண்டும் எனவும், ஆதலால் தான் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிர்வாணக் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெற்ற காட்சிகள் என்பது கூடுதல் தகவல்.
ஆண்ட்ரியா இதற்கு முன் “அரண்மனை” திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார். அதன் பின் “அவள்” என்ற பேய் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் “அரண்மனை 3” திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படங்களை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படத்திலும் பேயாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கிய “பிசாசு” திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களமாக அமைந்த பேய் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படமும் வித்தியாசமான பேய் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.