CINEMA
ஆண்ட்ரியாவுடன் கடற்கரையில் பாட்டு பாடும் சூப்பர் சிங்கர் பிரியங்கா..
நடிகை ஆண்ட்ரியாவுடன் சூப்பர் சிங்கர் பிரியங்கா கடற்கரையில் பாடல் பாடுவது போல் ஒரு புரோமோ வீடியோ உருவாகி உள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிசாசு 2”. இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் “பிசாசு 2” திரைப்படத்தின் ஒரு பாடலுக்கான புரோமோ வீடியோ ஒன்று உருவாகி உள்ளது. அதில் ஆண்ட்ரியாவுடன் சூப்பர் சிங்கர் பிரியங்கா தென்படுகிறார்.
இந்த வீடியோவின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. கடற்கரையில் ஆண்ட்ரியாவுடன் சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடுவதாக இது படமாக்கப்பட்டுள்ளதாம். “நெஞ்சே கேளு” என்று தொடங்கும் இந்த பாடலை பிரியங்காவே பாடியும் உள்ளார்.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சூப்பர் சிங்கர் பிரியங்கா “சில மாதங்களுக்கு முன்பு இந்த பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டது. இயக்குனர் மிஷ்கின் இந்த பாடலின் உணர்வை அழகாக என்னுள் கடத்தினார். ரெக்கார்டிங் மிகவும் கலகலப்பாக இருந்தது. இந்த பாடல் தெலுங்கிலும் உருவாகி உள்ளது. இந்த பாடல் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால் நானும் ஆண்ட்ரியாவும் தென்படும் வீடியோ இந்த பாடலின் புரோமோஷனுக்காக எடுக்கப்பட்டது” என கூறினார்.
மிஷ்கின் இயக்கிய “பிசாசு” திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களமாக அமைந்த பேய் திரைப்படமாக அமைந்தது.இத்திரைப்படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படமும் வித்தியாசமான பேய் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ரியா இதற்கு முன் “அரண்மனை” திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார். அதன் பின் “அவள்” என்ற பேய் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் “அரண்மனை 3” திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படங்களை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படத்திலும் ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.