CINEMA
அமீர் கானுடன் இணைந்த உதயநிதி.. மாஸ் காம்போ
அமீர் கானுடன் உதயநிதி இணைந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் “லால் சிங் சத்தா”. இத்திரைப்படத்தில் அமீர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா போன்றோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான “தி ஃபாரஸ்ட் கம்ப்” திரைப்படத்தின் தழுவல் ஆகும். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
“லால் சிங் சத்தா” திரைப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி உள்ளார். பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பிரீதம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் அமீர் கான், கிரண் ராவ், ஜோதி தேஷ்பாண்டே, அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.
“லால் சிங் சத்தா” திரைப்படம் தமிழில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
#AamirKhan sir #KareenaKapoorKhan @AKPPL_Official #AdvaitChandan @atul_kulkarni #KiranRao @chay_akkineni @RedGiantMovies_ @Viacom18Studios @ParamountPicsIN pic.twitter.com/92rVJjWSak
— Udhay (@Udhaystalin) July 16, 2022
உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக சமீப காலமாக பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கூட சந்தானம் நடிப்பில் வருகிற 29 ஆம் தேதி வெளிவர இருக்கும் “குலு குலு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக அறிவிப்பு வெளிவந்தது.
மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் “சர்தார்” திரைப்படத்தையும், சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் “கோப்ரா” திரைப்படத்தையும் வெளியிட உள்ளார். அடுத்ததாக அஜித் நடித்து வரும் “AK61” திரைப்படத்தையும் வாங்க உள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.