Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ALL TIME RECORD…  “விக்ரம்” படக்குழு வெளியிட்ட தாறுமாறு புரோமோ..

CINEMA

ALL TIME RECORD…  “விக்ரம்” படக்குழு வெளியிட்ட தாறுமாறு புரோமோ..

 “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையில் ஆல் டைம் ரெக்கார்டு புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி இரண்டே வாரங்களே ஆன நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 350 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் நிறைந்து வழிகிறது. பல திரையரங்குகளில் 24 மணி நேர ஸ்பெஷல் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு முன் வந்த கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் திரைப்படங்களையும் வீழ்த்தி சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படக்குழு மாபெரும் வெற்றியை தொடர்ந்து “ALL TIME RECORD” புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். “விக்ரம்” திரைப்படத்தில் கமல் ஹாசனை பின்னால் இருந்து ஒருவர் அவரது கால் நரம்பை வெட்ட வரும்போது, அவரால் வெட்ட முடியாது. அப்போது கமல் அவரை பார்த்து ஒரு கதை சொல்வார். “ஒரு ஊர்ல சண்டைக்கு போயிருந்தப்போ எழும்பு உடஞ்சி ராடு வச்சிருக்கிறாங்க. வெட்ட முடியாது” என வசனம் பேசிவிட்டு அவரை தன் காலால் மிதிப்பார்.

திரைப்படத்தில் பார்வையாளர்கள் பெரிதும் ரசித்து பார்த்த காட்சிகளில் இதுவும் ஒன்று. இந்த காட்சியை “ALL TIME RECORD” காட்சியாக வெளியிட்டு உள்ளனர்.

இதனிடையே நேற்றைய முன் தினம் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் உதயநிதி  ஸ்டாலின், அனிருத், கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அன்புச்செழியன் என பலரும் கலந்து கொண்டனர். அதில் “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதற்காக பலருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

                 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top