CINEMA
திடீரென அந்த நடிகரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த ஆர் ஆர் ஆர் நடிகை… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஆர் ஆர் ஆர் நடிகை ஆலியா பட் திடீரென ஓடிப்போய் அந்த நடிகரை கட்டிபிடித்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் நடிகை ஆலியா பட், ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகை ஆவார். “ஹை வே”, “2 ஸ்டேட்ஸ்”, “அக்லி”, “கபூர் அண்ட் சன்ஸ்”, “உடுத்தா பஞ்சாப்”, “ஏ தில் ஹை முஷ்கில்”, “டியர் சிந்தகி”, “ராஸி”, “கல்லி பாய்” கலங்க்” “கங்குபாய் கத்தியவாடி” என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கிய “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் நடித்து தென் இந்தியர்களின் மனதையும் கொள்ளைக் கொண்டார்.
ஆலியா பட் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். நடிகர்கள் பலரும் ஆலியா பட்டிற்கும் ரன்பீர் கபூருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
தற்போது ஆலியா பட் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்”. இதில் ஆலியா பட் ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் நடிகையான “வொண்டர் உமன்” புகழ் கேல் கடோட்டுடன் நடிக்கிறார். சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் தனது வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்து இந்தியா வந்த ஆலியா பட்டை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார் அவரது கணவர் ரன்பீர் கபூர். அப்போது சிறு குழந்தை போல் துள்ளி குதித்து ரன்பீர் கபூரை கட்டிப்பிடித்து கொண்டார்.
View this post on Instagram
இந்த வீடியோவை பிரபல பாலிவுட் புகைப்படக்காரர் வரிந்தர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
