Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கே கோடி ரூபாயா? வசூல் அரசி ஆலியா பட்..

CINEMA

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கே கோடி ரூபாயா? வசூல் அரசி ஆலியா பட்..

ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு எவ்வளவு கோடி கட்டணம் வசூலிக்கிறார் தெரியுமா?

பாலிவுட் நடிகை ஆலியா பட், ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். “ஹை வே”, “2 ஸ்டேட்ஸ்”, “கபூர் அண்ட் சன்ஸ்”, “உடுத்தா பஞ்சாப்”, “ஏ தில் ஹை முஷ்கில்”, “டியர் சிந்தகி”, “ராஸி”, “கல்லி பாய்” கலங்க்” “கங்குபாய் கத்தியவாடி” என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “பாகுபலி” இயக்குனர் ராஜமௌலி இயக்கிய “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் நடித்து தென் இந்தியர்களின் மனதையும் கொள்ளைக் கொண்டார்.

இந்நிலையில் ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் விளம்பரத்திற்கு கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது கிரிஷ் ஜோகர் என்ற வணிக ஆய்வாளர் “ஆலியா பட் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் ஒரு பதிவுக்கோ அல்லது ஒரு விளம்பரத்திற்கோ ரூ. 85 லட்சம் முதல் ஒரு கோடி வரை கட்டணம் வசூலிப்பதாக கூறியுள்ளார். இந்த செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆலியா பட் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். நடிகர்கள் பலரும் ஆலியா பட்டிற்கும் ரன்பீர் கபூருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

தற்போது ஆலியா பட் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்”. இதில் ஆலியா பட் ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் நடிகையான “வொண்டர் உமன்” புகழ் கேல் கடோட்டுடன் நடிக்கிறார். சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த செய்தி பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top