CINEMA
“அஜித் 61” திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? போனி கபூர் வெளியிட்ட புதிய அப்டேட்
“அஜித் 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் படத்தின் ரிலீஸ் குறித்து போனி கபூர் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவான “வலிமை” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மனதை உருக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது.
படத்திற்கு பல நெகட்டிவ் ரிவ்யூக்கள் வந்திருந்தாலும் ரசிகர்கள் வலிமையை உற்சாகத்தோடு கொண்டாடினர். இதனை தொடர்ந்து “அஜித் 61” திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்தன. அத்திரைப்படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கப்போவதாக கூறப்பட்டது. மேலும் போனி கபூர் தான் இத்திரைப்படத்திற்கும் தயாரிப்பாளர்.
போனி கபூர்- ஹெச். வினோத்-அஜித் கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படமான “நேர்கொண்ட பார்வை” ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் நல்ல விமர்சங்களே வந்தன. மேலும் இத்திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்த “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். சமீபத்தில் மறைந்த போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திரைப்படத்தில் அஜித் நடித்ததாக தகவல்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து மூவர் கூட்டணியில் “வலிமை” திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது “அஜித் 61” தயாராகி வருகிறது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடப்பதாக அறியப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான முக்கியமான அப்டேட் ஒன்றை போனி கபூர் தெரிவித்துள்ளார்.
அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் போனி கபூர் “அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்டில் முடிவடைந்துவிடும், தீபாவளிக்கு இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அஜித் ரசிகர் குஷியாக உள்ளனர்.