CINEMA
கையில் மதுக்கோப்பையுடன் அஜித் மற்றும் ஷாலினி.. அதிர்ச்சி புகைப்படம்
அஜித் குடும்பத்தார் கைகளில் மதுக்கோப்பையுடன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த பல நாட்களாக வித விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கப்பல், ஹோட்டல், என அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கங்கெல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே படப்பிடிப்பின் இடைவேளையில் தனது குடும்பத்துடன் ஐரோப்பா நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அஜித். சென்ற வாரம் அஜித் தனது ரசிகருக்கு கைப்பட எழுதிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி ஒன்று வைரல் ஆனது. அதனை தொடர்ந்து அஜித் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.
அதன் பின் பாரிஸில் ஈஃபில் டவர் பகுதியில் தனது ரசிகர் ஒருவரின் சட்டையில் தனது கையெழுத்தை இட்ட வீடியோ ஒன்றும் வைரல் ஆனது. இந்நிலையில் அஜித் தனது குடும்பத்துடன் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவர்களின் கையில் மதுக்கோப்பையுடன் தென்படுகிறார்கள். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் “வலிமை” திரைப்படத்தை தொடர்ந்து “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஒரு பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேங்க் ராப்பரியை அடிப்படையாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.