CINEMA
பைக்கை கைவிட்டு காரை கைப்பற்றிய அஜித்?? ஆள் பயங்கரமா இருக்காரே..
நடிகர் அஜித் தற்போது உலக சுற்றுலாவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் வெளிநாட்டில் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள் போல. இந்த இடைவேளையில் அஜித் தனது கனவு பயணத்தை தொடங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன் பைக்கில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை அஜித் சுற்றி வந்தார். அவர் பைக்குடன் இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.
அதனை தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் அடாமியம் என்ற சுற்றுலா தளத்தில் அஜித் கையில் ஹெல்மெட்டுடன் இருந்தவாறு ஒரு புகைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து அஜித் கப்பலில் எங்கோ கடல் தாண்டி சென்று கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
அதன் பின் தற்போது அஜித்தின் சில புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு வெள்ளை கலர் நவீன காருடன் அஜித் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் அஜித் ஒரு ஹோட்டலில் எடுத்த இரண்டு புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
அதில் அஜித் “AK 61” கெட் அப்பில் ஸ்டைலாக மாஸாக காட்சி தருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்த Schedule-க்கான இடைவேளை கிடைத்திருப்பதாக தெரிகிறது. இந்த இடைவேளையை அஜித் தனது கனவு பயணத்திற்காக செலவிட்டுக் கொண்டிருக்கிறார். “AK 61” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.