Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தல அஜித்!! வேற லெவல்..

CINEMA

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தல அஜித்!! வேற லெவல்..

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் எத்தனை தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளர் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெற்ற 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்றுள்ளார். அதாவது சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும் என 4 தங்கப் பதக்கங்களை அஜித் குமார் வென்றுள்ளார்.

மேலும் 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கமும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கமும் என 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆக மொத்தம் 6 பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளார் அஜித் குமார். இச்செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 46 ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் குமாரும் அவரது குழுவும் 6 பதக்கங்களை வென்றனர். இதனை தொடர்ந்து தற்போது அஜித் குமார் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு அதே போல் 6 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top