CINEMA
ரசிகரின் குழந்தையை கையில் வாங்கி போஸ் கொடுத்த அஜித் குமார்…
நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் ஆகியோரின் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.
“AK 61” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Robbery-ஐ மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான வரவேற்பையே பெற்றது. எனினும் “AK 61” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறிக்கொண்டு அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் குமார் தற்போது ரசிகர்களை சந்தித்தபோது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித் குமார் தனது ரசிகர் ஒருவரின் குழந்தையை கையில் வாங்கியபடி புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். அப்புகைப்படங்கள் இதோ..
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் அஜித் குமார் ரன்வேக்கு செல்லும் பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த வீடியோ வைரல் ஆனது. மேலும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித் குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது அஜித் குமார் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
“AK 61” திரைப்படம் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கோ வெளியாகலாம் என தகவல் வெளிவருகிறது. ஒரு வேளை பொங்கலுக்கு வெளிவந்தால், விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்துடன் “AK 61” திரைப்படம் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
