Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வானில் இருந்து ரசிகர்களுக்கு கை காட்டிய அஜித்… வைரல் புகைப்படங்கள்

CINEMA

வானில் இருந்து ரசிகர்களுக்கு கை காட்டிய அஜித்… வைரல் புகைப்படங்கள்

அஜித் குமார் மேலே இருந்து ரசிகர்களுக்கு கை காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருச்சியில் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அஜித் குமார் கலந்துகொண்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பைக் ரேஸர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மட்டுமல்லாது அவருக்கு விமானம் ஓட்டுவதிலும், துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் உண்டு. இவ்வாறு பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் அஜித் குமார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 46 ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் குமாரும் அவரது குழுவும் 6 பதக்கங்களை வென்றனர். இதனை தொடர்ந்து தற்போது அஜித் குமார் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

நேற்று அஜித் போட்டியில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு மாடியில் இருந்து அஜித் கை காட்டிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. அப்புகைப்படங்கள் இதோ..

 

 

 

 

நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.

இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான வரவேற்பையே பெற்றது. எனினும் “AK 61” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறிக்கொண்டு அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top