Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பேருந்தில் நின்றுகொண்டே பயணம் செய்த அஜித்.. எளிமையின் மறு உருவமே!!

CINEMA

பேருந்தில் நின்றுகொண்டே பயணம் செய்த அஜித்.. எளிமையின் மறு உருவமே!!

நடிகர் அஜித் பேருந்தில் மக்களோடு மக்களாக நின்றுகொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் குமாரின் சிம்ப்ளிசிட்டியை பற்றி நாம் அறியாதது இல்லை. தான் ஒரு நடிகர் என்ற எண்ணமும் நம்மை பலரும் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தில் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் துளி கூட இல்லாமல் நானும் ஒரு சாதாரண மனிதன் தான் என தனது எளிமையை காட்டிக்கொண்டே இருப்பார்.

சில வருடங்களுக்கு முன்பு வாக்களிக்கும் மையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த அஜித்தின் புகைப்படம் இப்போதும் பிரபலமாக பேசப்பட்டு வருபவை. இந்த நிலையில் தற்போது அஜித் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அஜித் குமார் ரன்வேக்கு செல்லும் பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித் குமார் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகிவருகின்றன.

 

“AK 61” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். தற்போது மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார். அதே போல் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் அஜித்-ஹெச் வினோத் கூட்டணியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

“AK 61” திரைப்படம் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கோ வெளியாகலாம் என தகவல் வெளிவருகிறது. ஒரு வேளை பொங்கலுக்கு வெளிவந்தால், விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்துடன் “AK 61” திரைப்படம் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top