CINEMA
லடாக்கில் ஊர் சுற்றும் தல அஜித்!! வைரல் புகைப்படங்கள்
லடாக் பகுதியில் அஜித் தனது பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் ஒரு பைக் ரேசர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தே விஷயமே. சமீபத்தில் கூட ஐரோப்பா நாடுகளில் அஜித் குமார் ஊர் சுற்றிக்கொண்டிருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகின.
அதனை தொடர்ந்து தற்போது லடாக் பகுதியில் அஜித் குமார் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் குமாரின் 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தான் இப்புகைப்படங்கள் #11YearsOfCultMankatha என்ற ஹேஷ்டேக்கோடு வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ..
அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை”,”வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹெச் வினோத்-அஜித் குமார்-போனி கபூர் ஆகியோர் மீண்டும் “AK 61” திரைப்படம் மூலமாக இணைந்திருக்கின்றனர்.
“AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மகாநதி ஷங்கர், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)