CINEMA
“உங்கள் காதுகள் பத்திரம்”.. ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்
காதுகளை பாதுகாப்பது குறித்து அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.
அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “AK 61” திரைப்படம் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கோ வெளியாகலாம் என தகவல் வெளிவருகிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கான Pre Production பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அஜித் குமார் சமூக வலைத்தளத்தில் இல்லை என்பதால் அவரது மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் கூறிய அறிவுரையை பகிர்ந்துள்ளார்.
அதில் டின்னிடஸ் என்ற காது சம்பந்தமான பிரச்சனை குறித்து கூறியுள்ளார். அந்த பதிவில் சுரேஷ் சந்திரா “உங்கள் காதுகளை பாதுகாத்துகொள்ளுங்கள், அளவற்ற அன்புடன் அஜித் குமார்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் அஜித் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. “அஜித் தனது ரசிகர்களின் மேல் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார்” என பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
“Protect your ears”
Unconditional love always – Ajith pic.twitter.com/qd543owHDt— Suresh Chandra (@SureshChandraa) August 20, 2022
அஜித் குமார் சமீபத்தில் அவரது ரசிகர்களுடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்துகொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் குமார் தனது ரசிகர் ஒருவரின் குழந்தையை கையில் வாங்கியபடி புகைப்படத்திற்கு போஸ் தந்தார்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் அஜித் குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரல் ஆனது. இந்த நிலையில் தான் தற்போது அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
