CINEMA
இமய மலையில் பைக் ஓட்டும் அஜித் குமார்.. வைரல் வீடியோ
நடிகர் அஜித் குமார் இமய மலைப் பாதையில் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் ஒரு பைக் ரேசர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சமீபத்தில் கூட ஐரோப்பா நாடுகளில் அஜித் குமார் ஊர் சுற்றிக்கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
அதனை தொடர்ந்து தற்போது லடாக் பகுதியில் அஜித் குமார் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அப்புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போது இமய மலைப் பாதையில் அஜித் குமார் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ..
Thala Latest 🔥#AK61 #Ajithkumar pic.twitter.com/KiCMBYqaMn
— 𝐒𝐎𝐎𝐑𝐘𝐀𝐇 (@ajithboss717) September 2, 2022
அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை”,”வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹெச் வினோத்-அஜித் குமார்-போனி கபூர் ஆகியோர் மீண்டும் “AK 61” திரைப்படம் மூலமாக இணைந்திருக்கின்றனர்.
“AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மகாநதி ஷங்கர், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.