CINEMA
நடிகை மஞ்சு வாரியருடன் லடாக்கில் ஊர் சுற்றும் அஜித் குமார்.. வைரல் புகைப்படங்கள்
அஜித் குமார், மஞ்சு வாரியருடன் லடாக் பகுதியில் பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அஜித் குமார் லடாக் பகுதியில் பைக்கில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவர் இமய மலைப் பகுதியில் பைக் ஓட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.
இந்த பயணத்தில் தற்போது மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். ஆம்! அஜித் குமாருடன் லடாக் பகுதியில் மஞ்சு வாரியரும் சுற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அப்புகைப்படங்கள் இதோ..
அஜித் குமார் நடித்து வரும் “AK 61” திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை”,”வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹெச் வினோத்-அஜித் குமார்-போனி கபூர் ஆகியோர் மீண்டும் “AK 61” திரைப்படம் மூலமாக இணைந்திருக்கின்றனர்.
“AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மகாநதி ஷங்கர், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.