CINEMA
Chef-க்கே Cake ஊட்டிவிட்ட அஜித் குமார்; வைரல் புகைப்படம்
நடிகர் அஜித் குமார் செஃப் ஒருவருக்கு கேக் ஊட்டி விட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் குமார் நடித்து வரும் “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்திரைப்படத்தில் அஜித் குமார் ஏற்று நடிக்கும் கெட் அப் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பல படங்களில் தென்பட்டவர் தற்போது வெள்ளை முடி தாடியுடன் மாஸாக தென்படுகிறார். “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் தான் இத்திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ஆதலால் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே அஜித் “AK61” கெட் அப்பில் இருந்தவாறு பல புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட துப்பாக்கி பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.
அதனை தொடர்ந்து தற்போது செஃப் ஒருவருக்கு அஜித் குமார் கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்புகைப்படங்களின் பிண்ணனியை பார்க்க Five Star ஹோட்டல் போல் தெரிகிறது. அஜித் செஃப் ஒருவருக்கு கேக் ஊட்டி விடுகிறார். அந்த செஃபின் பெயர் மகேஷ் என தெரிய வருகிறது.
அஜித்திற்கு மறு பக்கத்தில் ஒருவர் தென்படுகிறார். இம்மூவருக்கு பின்னும் அந்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் தென்படுகிறார்கள். அஜித் “Ak 61” கெட் அப்பில் தென்படுகிறார். இதனை வைத்து பார்க்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது. அதாவது இந்த Five Star ஹோட்டல் “AK 61” திரைப்படத்தில் இடம்பெறும் எதாவது காட்சியில் வந்து போகலாம் என வியூகிக்க முடிகிறது. இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “AK 61” திரைப்படத்திந் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.