CINEMA
ஷாருக் கானுடன் அஜித் குடும்ப நபர் எடுத்து கொண்ட புகைப்படம்..
நயன்தாரா திருமணத்தில் அஜித் குடும்ப நபர் ஒருவர் ஷாருக் கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று மகாபலிபுரம் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். சிவப்பு உடையில் கண்கவரும் மணப்பெண்ணாக வந்த நயன்தாரா பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.
திருமண நிகழ்வில் வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் Happiest moment-களாக இருந்தன. இவர்களின் திருமண நிகழ்வில் ரஜினிகாந்த், அஜித், ஷாருக் கான், மோகன் ராஜா, ஐசரி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அஜித் குமார் தனது மனைவி, மக்கள் மற்றும் உறவினர்களுடன் நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஷாருக் கானுடன் அஜித் குடும்ப உறுப்பினர் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினியின் தங்கை நடிகை ஷாமிலி , ஷாருக் கானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஷாமிலி அதில் “இந்த தருணத்தில் நான் எனது முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்து விட்டேன், என்னுடைய குழந்தை பருவ ஹீரோவையும், இப்போதும் எப்போதுமான எனது ஹீரோவையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த அஞ்சலி திரைப்படம் அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.
ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram