CINEMA
ஹீரோயினாக களமிறங்கும் அஜித்தின் மகள்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..
மக்களின் மனதில் அஜித்தின் மகளாகவே பதிந்து போன அனிகா தற்போது கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
அஜித் நடித்த “என்னை அறிந்தால்”, “விஸ்வாசம்” போன்ற திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. ரசிகர்கள் பலரும் இவரை அஜித்தின் சொந்த மகள் போலவே பார்த்து வந்தனர். அந்த அளவுக்கு இவருக்கும் அஜித்துக்குமான அப்பா-மகள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியது.
இந்த நிலையில் அனிகா தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். மலையாளத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் பெயர் “ஓ மை டார்லிங்”.
View this post on Instagram
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனிகாவிற்கு தற்போது வயது 17. இவர் சிறு வயதில் இருந்தே பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர். மம்முட்டி, மோகன் லால் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் பலருடனும் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“அமர்நாத்”, “கலர்ஸ் ஆஃப் லைஃப்”, “அம்மு” போன்ற குறும்படங்களில் அனிகா நடித்துள்ளார். மேலும் “கியூன்” என்ற வெப் சீரீஸிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில விருது, ஆசியா நெட் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
சமீப காலமாக அனிகா ஒரு டாப் மாடலாக திகழ்ந்து வருகிறார். பல கண்கவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். “அஜித்தின் மகளாக நடித்தவர் தானா இவர், ஆள் வேற மாதிரி ஆகிட்டாரே” என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
வருங்காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னி ஆவதற்கு அனிகாவிற்கு வாய்ப்பிருக்கிறது எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஏனென்றால் இவருக்கென்றே தற்போது ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இதுவரை ஜொலித்து வந்த அனிகா, இனி கதாநாயகியாகவும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.