CINEMA
மீண்டும் அஜித்துடன் இணையும் அந்த பிரபல இயக்குனர்??
பல வருடங்களுக்கு முன் அஜித்தை வைத்து ஹிட் கொடுத்த அந்த பிரபல இயக்குனர் மீண்டும் அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
“வலிமை” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தாலும், ஓரளவு கலவையான ரெஸ்பான்ஸே வந்தது. எனினும் அஜித் ரசிகர்கள் வேற லெவலில் படத்தை தூக்கி வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் வேற லெவல் எக்ஸ்பேக்டேஷனோடு இருக்கிறார்கள். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் தற்போது இடைவேளை விடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அஜித் தனது பைக்கில் உலகம் எங்கும் சுற்றிக் கொண்டு இருக்கிறார். தற்போது அவர் ஐரோப்பா நாடுகளில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அஜித் அதில் “AK 61” கெட் அப்பில் தென்படுகிறார்.
விரைவில் “AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அஜித் “AK 61” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் அஜித் அதனை தொடர்ந்து ஒரு பிரபல ஹிட் இயக்குனருடன் இணைகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுடன் அஜித் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் முருகதாஸ் அஜித்தை வைத்து “தீனா” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அஜித்தின் கேரியரில் முக்கிய திரைப்படமாக அமைந்தது அத்திரைப்படம்.
இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணி 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
