CINEMA
சிட்டிசன் இயக்குனரோடு மீண்டும் இணையும் அஜித்; ரசிகர்கள் உற்சாகம்
சிட்டிசன் இயக்குனர் சரவண சுப்பையாவோடு அஜித் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் தற்போது “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை அஜித்தின் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் மேற்கண்ட திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
“AK 61” திரைப்படத்தின் அஜித் கெட் அப் பல நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “வலிமை” திரைப்படத்தை இயக்கிய ஹெச். வினோத்தே இத்திரைப்படத்தையும் இயக்கி வருவதால் ரசிகர்கள் இடையே எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ளது.
இந்நிலையில் “AK 61” திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் “சிட்டிசன்” இயக்குனர் சரவண சுப்பையா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“சிட்டிசன்” திரைப்படம் அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாகும். இன்றும் அத்திரைப்படத்தை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு. அதுவும் அத்திரைப்படத்தில் அஜித் பல கெட் அப்களில் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவான “வலிமை” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மனதை உருக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது. படத்திற்கு பல நெகட்டிவ் ரிவ்யூக்கள் வந்திருந்தாலும் ரசிகர்கள் வலிமையை உற்சாகத்தோடு கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து அஜித் “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.