CINEMA
மேடையில் திடீரென கதறி அழுத தனுஷ் பட நாயகி…அய்யோ!
மேடையில் திடீரென தனுஷ் பட நாயகி அழுததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
சாய் பல்லவி நடிப்பில் உருவான “கார்கி” திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் Pre release event நடைபெற்றது. அவ்விழாவில் சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் மேலும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மேடையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேச தொடங்கினார். அப்போது “மூன்று வருடங்கள் இந்த படத்தோடு பயணித்துள்ளேன்” என்று கூறி முடித்தவுடன் திடீரென அழுக தொடங்கினார்.
அப்போது சாய் பல்லவி அவர் அருகே வந்து அவரை தேற்றினார். அதன் பின் சாய் பல்லவி “ஐஸ்வர்யா லட்சுமி இந்த திரைப்படத்தின் பணிகள் எப்போது தொடங்கியதோ அப்போதில் இருந்தே இயக்குனருக்கு துணையாக இருக்கிறார். இயக்குனருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டபோது ஐஸ்வர்யா தான் உதவினார்” என கூறினார்.
அதன் பின் பேசிய “கார்கி” திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் “இந்த படத்தை முடிப்பதற்கு பணப்பற்றாக்குறை வந்த போது நிறைய நிறுவனங்களிடம் உதவி கேட்டேன். யாரும் முன் வரவில்லை. அப்போது ஐஸ்வர்யா லட்சுமி தான் தனது மூன்று திரைப்படங்களின் மூலம் வந்த வருவாய் மொத்தத்தையும் எனக்கு கொடுத்தார். அவர் இல்லை என்றால் நான் இங்கு நின்றிருக்க முடியாது” என கூறினார்.
அதன் பின் சற்று நிமிடங்களுக்கு பின் தனது எமோஷனலை கட்டுப்படுத்தி விட்டு ஐஸ்வர்யா லட்சுமி பேசத் தொடங்கினார். இந்த சம்பவம் பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
“கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தை 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா- ஜோதிகா வெளியிட உள்ளனர்.
